Saturday, November 9, 2013

காலமும் மனிதனும்

மனிதன் பிறந்தது முதல் அவன் இரக்கும்வரை அவனுடைய வாழ்க்கை செல்லும் பாதை ஒரு வித்தியாசமானதாகும். காலையில் தொடங்கும் பயணம், இறவில் தான் முடிகிறது. பயணமென்றால் நான் பேருந்து பயணத்தை கூறவில்லை. வாழ்க்கை என்ற பயணத்தை தான் கூறுகின்றேன். ஒருமுறை காலம் மனிதனை பார்த்து கேட்டதாம், மனிதா உன் கையில் கட்டி இருப்பது என்ன? அதர்க்கு மனிதன் சொன்னானாம் அது கை கடிகாரமென்று. காலம் அவனை அதோடு விடவில்லை அதை வைத்து நீ என்ன செய்வாய் என்று அடுத்த கேழ்வியாக மனிதனை பார்த்து கேட்டது. அதர்க்கு மனிதன் இதை வைத்து நான் என்னுடைய நேரத்தை கணக்கிடுவேன். என்றானாம் மனிதன். காலம் கேட்டது நேரத்தை கணக்கு செய்து நீ உன்னுடைய வாழ்க்கையில் என்ன செய்திருக்கின்றாய் என்றதாம். அதர்க்கு அவனால் பதில் சொல்லமுடியவில்லை. நம்முடைய நிலையும் இதுதான். இருக்கும் நேரங்களை விட்டுவிட்டு இருதியில் தான் நாம் வேகமாக செய்யமுயல்வோம். இது மனித இயல்வு அதை எவராலும் மாற்ற முடியாது. குடிக்கும் ஒரு மனிதன் குடியை மரந்து குடிக்கின்ற நேரம் அவனால் வீணடிக்கப்படுகின்றது. இது ஒரு சிறிய உதாரணம் தான். நாம் வீணடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு பொன்னை வீணடிப்பதர்க்கு சமம். என்பது எந்னுடைய கருத்து. கையில் ஒரு வயதாகும் குழந்தை, அந்த குழந்தையை காட்டி குழந்தைக்கு பால் கொடுக்க கூட காசு இல்லை என்று சாலயில் பிச்சை எடுக்கும் மக்கள் இன்னும் நம்முடைய சமூகத்தில் இருப்பது தான் மிகவும் வேதனை மிக்க ஒரு விஷயம். இதில் உண்மையாகவே எத்தனை மக்கள் அப்படி கஸ்டப்படுகின்றார்களென்று சொல்லமுடியும்? பணம் வேண்டும் என்பதர்க்காக நேரத்தை வீணடித்து வெளியில் எதை வேண்டுமானாலும் செய்பவர்கள் தான் அதிகம். இது சரியானதாக இல்லை. எனவே, நேரமும் காலமும் நமக்கு தருகின்ற நேரத்தை பயன்படுத்துங்கள் என்பது என்னுடைய கருத்து.

No comments:

Post a Comment