Wednesday, October 30, 2013

நடிகவேல் m.r. ராதா சிறப்பு பார்வை

ஏரி இரங்கும் எஹத்தாளக்குறல், கேளிக்கிண்டலில் கிழித்து தொங்கவிடும் சமூக அவலங்கள் என தனக்கஎன்றே திறை உலகில் ஒரு தனி முத்திரை பதித்தவர் தான் m.r. ராதா. இவர் பிறந்தது சென்னையிலுள்ள சிந்தாதரிப்பேட்டை. தந்நுடைய எட்டு வயதிலேயே வீட்டை விட்டு ஓடி விட்டாராம் திரு ராதா அவர்கள். அதன் பிறகு டப்பி அறங்க சாமி நாய்டு அவர்கள் ராதாவிர்க்கு நாடகத்தில் நடிக்க வாய்ப்பழித்தார். முதல் முதலில் அரிச்சந்திரா நாடகத்தில் லோகிதாசனாக வந்து அம்மாப்பசிக்கிது, அம்மா பசிக்கிது என்ற வசனம் தான் ராதா அவர்கள் நடித்த முதல் நடிப்பாகும். அதன் பிறகு தான் ராஜசேகர் என்ற திறைப்படத்தில் அவர் நடித்தார். இது அவருடைய முதல் திறைப்படமாகும். அந்த படத்தின் டைட்டிலில் தான் அவர் m.r. ராதா என்று அறிமுகமானார். இவை எல்லாம் பின் நாட்களில் சுயமரியாதை கலைஞராக சுடர் விட்ட ராதாவின் தொடக்க வாசல்கள். ராதாவின் நாடகக்கோட்டயிலே சிலர் ஒரு பத்திரிக்கையை மரைத்து வைத்து படிப்பது வழக்கம். ஒரு நாள் ராதா பொன்னையா என்கிற நடிகரிடம் அது என்னையா பத்திரிக்கை என்று கேட்டாராம். அதர்க்கு அவர், இது தந்தை பெரியார் அவர்கள் நடத்தும் குடியரசு என்ற பத்திரிக்கை என்று ராதாவிடம் கூறினாராம். வாங்கி படித்த ராதாவுக்கு எப்படியாவது தந்தை பெரியாரை பார்த்து விடவேண்டும் என்கின்ற ஆசை. பொன்னையா என்பவர் தான் முதல் முதலில் ராதா அவர்களை பெரியாரிடம் அறிமுகம் செய்து வைத்தார். இது திரு m.r. ராதாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய திருப்பமாகும். இந்த சந்திப்பு தான் பின் நாளில் இவரை ஒரு சிந்தனையாளராக மாற்றியது. அதன் பிறகு திராவிடக்களகத்தால் நடத்தப்படும் அனைத்து கூட்டங்களிலும் ராதா அவர்களுடைய நாடகம் இருக்கும். ஒருமுறை அண்ணா அவர்கள் ஒருப்பொது கூட்டத்தில்எ பேசியப்போது நாங்கள் நூரு மாநாடுகள் நடத்துவதும் சரி, ராதாவின் ஒரு நாடகத்தை ஒருமுறை பார்ப்பதும் சரி என்று பேசினாராம். பிர்க்காலத்தில் பெரியாரும் இதனை வழிமொழிந்தார். பெரியாரின் மாநாடுகளிலே திரு m.r. ராதா தான் குதிரயில் ஏரி கொடிப்பிடித்து முதலில் செல்வாரம். ஆனால், கடைசிவரை ராதா அவர்களுடைய இயக்கத்தில் சேரவில்லை. 1954 ாம் ஆண்டு அரசு கம்மியூனிஸ்டுகளை வேட்டையாடி கொண்டிருந்த காலம். அப்போது புகழிடம் கேட்டு ராதாவிடம் அழைத்து வரப்பட்டார் கம்மியூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு ஜீபா அவர்கள். ராதா அவருடைய தோற்றத்தை மாற்றி நாடகக்குழுவில் உள்ள ஒரு பெண்ணின் தந்தை என்று கூறி அவருக்கும் அவ்வப்போது சில கதா பாத்திரங்களை கொடுத்து நடிக்கச்செய்தாராம். ஆனால் ஜீபாவிர்க்கோ நடிப்பே வரவில்லை. இவ்வாரு திரு m.r. ராதா அவர்கள் தனது வாழ்க்கையில் ஒரு நீங்காத முத்திரையை பதித்தவர். ராதாவிர்க்கு நடிகவேல் என்ற பட்டத்தை வழங்கியவர் திராவிடக்களகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்கள் ஆவார்.

No comments:

Post a Comment