Saturday, November 23, 2013

கடிதம் பற்றிய நினைவலைகள்

தொலைப்பேசி வருவதர்க்கு முன்னால் கடிதங்கள் முக்கிய பங்காற்றின என்பது நமக்கு தெரியும். நேற்று ஒரு வானொலியில் கல்வி பற்றிய ஒலிபரப்பு நடைபெற்றிருந்தது. அதில் கடிதம் எப்படி எழுதுவது என்பதை பற்றிய ஒரு செய்தியயும் அவர்கள் ஒலிபரப்பினார்கள். அப்போது என்னுடைய மனதில் 1994 ஆம் ஆண்டில் நான் சென்னைக்கு வந்தபோது வீட்டிர்க்கு எழுதிய கடிதங்களும் எனக்கு வந்த கடிதங்களும் தான் நினைவிர்க்கு வந்தன. அப்போது தொலைப்பேசிகள் எங்காவது ஒரு வீட்டில் தான் இருக்கும். என்னுடைய வீட்டில் தொலைப்பேசி கிடையாது. கடிதம் மூலம் தான் தகவல்களை பரிமாறிக்கொள்வோம். அப்போது நான் 3 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நேரம், எனக்கு வந்த கடிதங்கள் அனைத்தயும் நான் சேமித்து வைத்தேன். ஏறக்குறைய 12 கடிதங்கள் மொத்தமாக நான் சேமித்தவை. காலாண்டு விடுமுறயின்போது தான் அவற்றை மொத்தமாக தூக்கி வெளியே வீசினேன். அப்போதெல்லாம் கடிதம் எழுதும்போது ஒரு பாடலை சிலர் பாடிக்கொண்டே எழுதுவது வழக்கம். அது எந்த பாடலென்றால், அப்போது வெழிவந்த காதல்கோட்டை என்ற திறைப்படத்தில் உள்ள நலம் நலமறிய ஆவல் என்ற பாடல் தான். ஒரு விடுமுறைக்கு நாங்கள் வீட்டிர்க்கு செல்லவேண்டுமென்றால், கடிதத்தில் தான் நாங்கள் எங்களுடைய வீட்டிர்க்கு தெரிவிப்போம். சிலருடைய கடிதங்கள் சேராமல் கூட இருந்தன. ஆனால் இன்று அனைவருடைய கைகளிலும் செல் தொலைப்பேசிகள் அதிகமாக இருக்கின்றன; எனவே நாம் ஒரு செய்தியை எளிதில் மற்றவர்களோடு நாம் பஹிர்ந்துகொள்ளமுடியும். எது எப்படி இருந்தாலும் கடிதம் எழுதும் பாரம்பரியத்தை இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ளவேண்டும் என்பது எனது கருத்து.

Tuesday, November 19, 2013

நாடக நினைவலைகள்

பொதுவாக வேஷம் என்பது நாடகங்களில் போடுவது நாம் கண்டுகொண்டே இருக்கின்றோம். ஆனால், அந்த வேஷங்கள் நகைச்சுபை மிக்கதாக இருக்கவேண்டுமென்றால் சில குறிப்பிட்ட வேஷங்களை நாடகங்களில் பயன்படுத்துவது வழக்கம். குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால், கோமாளி போன்ற வேஷம், திருடன் போலீஸ் வேடம் என்று சொல்லிக்கொண்டேப்போகலாம். இவை எல்லாம் உடல் அசைவாலும், முக பாவனையாலும் கொடுக்கப்படுகின்ற நகைச்சுபையாகும். ஆனால், உடலசைவில்லாமல் கூட வேடமிட்டு மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தமுடியும் என்பது என்னுடைய பள்ளிப்பருவ வாழ்க்கை ஒரு சான்றாகும். நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் ஆண்டுவிழாவின்போது களியுகத்தில்காந்தி என்ற ஒரு நாடகம் மேடையிலே நடித்துக்காட்டப்பட்டது. அதாவது இன்றைய காலகட்டத்தில் காந்தி மீண்டும் பூமிக்கு வந்தால் எப்படியிருக்கும் என்பது தான் கதை. அந்த நாடகத்தில் நான் காந்தி சிலையாக நடித்த நினைவுகள் இன்றும் என் மனதை விட்டு நீங்காமல் நிர்க்கின்றன. காரணம், அதன் பிறகு என்னை பெரும்பாலும் பள்ளியில் நடிக்கும் நாடகங்களுக்கு சிலையாக நடிக்க வாய்ப்பு கொடுப்பார்கள். அந்த நாடகத்தில் என்னுடைய நண்பன் ஷதீஷ் பேசிய வசனங்கள் மற்றும் அந்த நாடகத்தில் காந்தி தாத்தாவாக நடித்த விக்காஷ் அண்ணா, எமதர்மனாக நடித்த கார்த்திக் அண்ணா ஆகியவர்களை இன்றும் என்னுடைய மனதை விட்டு நீங்காத ஒரு இடத்தைபிடித்துள்ளார்கள். இதை பற்றி ொருமுறை நான் இன்குளூசிவ்பிளானெட் இணயதளத்திலும் ொரு குறிப்பு கொடுத்திருந்தேன். இந்த நாடகத்தின் ஒரு சிறப்பு என்னவென்றால், நாங்கள் முதல் முதலில் நேரடியாகப்பேசி நடிக்காமல் படத்தில் வருவது போன்று டேப்ரெக்காடில் பதிவு செய்து அதர்க்கேற்றவாரு நாங்கள் நடித்தது தான். இவ்வாரு என்னுடைய நாடகத்தில் மறக்க முடியாத ஒரு நினைவை உங்களோடு நான் பகிர்ந்துகொண்டேன்.

Saturday, November 16, 2013

வட்டமடித்த நினைவலைகள்

நவம்பர் 14 ஆம் தேதி என்றால் அனைவருக்கும் நினைவிர்க்கு வருவது குழந்தைகள் தினம் தான். எனக்கும் அதேப்போன்று தான். 14 ஆம் தேதி அன்று பேருந்தில் அலுவலகம் செல்வதர்க்காக பயணம் செய்துகொண்டிருந்தேன். வள்ளுவன் சிலை என்ற இடம் வந்ததும் சில மாணவர்கள் கூட்டமாக பேருந்தில் ஏரினார்கள். குழந்தைகள் தினம் என்பதால் இவர்களுக்கு விடுமுறை அழித்திருப்பார்கள் என்று நான் நினைத்தேன். அப்போது என் பள்ளி வாழ்க்கை நினைவுகள் மெல்ல மெல்ல மனதை வட்டமடித்துக்கொண்டிருந்தன. முதல் முதலில் நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது மேடையில் பேசிய கவிதை, அதர்க்காக நான் பெற்ற பரிசுகள், அந்த கவிதையை எழுதி பேசுவதர்க்்கு சொல்லித்தந்த சாமண்டீஸ்வரி அக்கா, மேடையிலே பேசும்போது ஏர்ப்பட்ட ஒரு பயம் ஆகியவை என்னுடைய மனதை மீண்டும் மீண்டுமாக வட்டமடித்தன. அது மட்டுமல்ல பள்ளியில் நாங்கள் செய்த சேட்டைகள், அதர்க்காக மாட்டி உதை வாங்கிய நாட்கள் போன்றவை என்னுடைய மனதை விட்டு இன்றும் நீங்காமல் வட்டமடித்துக்கொண்டே இருக்கின்றன. நான் பேருந்திலிருந்து இறங்கும் இடம் வந்தது. அப்போது என் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த மாணவனை பார்த்து கேட்டேன் தம்பி நீ எந்த வகுப்பு படிக்கின்றாய்? அதர்க்கு அவன் ஆராம் வகுப்பு அண்ணா என்று கூறினான். குழந்்தைகள் தினம் என்பதால் தான் உங்களுக்கு விடுமுறையா? என்று நான் அவனிடம் கேட்டேன். அவனோ அப்படி எல்லாம் இல்லை அண்ணா எங்கள் பள்ளியில் பணிபுறியும் ஆசிரியர் ஒருவர் நேற்று மாலை காலமானார் அதனால் தான் எங்களுக்கு விடுமுறை விட்டார்கள் என்று கூறினான். எனக்கும் இறங்கும் இடம் வந்தது நானும் பேருந்திலிருந்து இறங்கி விட்டேன். அப்போது தான் என்னுடைய மனதில் தோன்றியது நாம் தவறாக கணித்துவிட்டோமென்று. என்றபோதும்் என் பள்ளி வாழ்க்கையை இன்றழவும் மறக்கமுடியவில்லை என்பது தான் உண்மை.

Thursday, November 14, 2013

அனுபவம் கற்றுத்தரும் பாடம்

அனுபவங்கள் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பாடத்தை நமக்கு கற்று தந்து கொண்டே இருக்கின்றன. அவை நாம் பயிலும் புத்தகத்தில் உள்ள பாடங்களை விட இன்னும் ஒருபடி மிகுதியாக நமக்கு கற்று தருகின்றன. இத்தகைய அனுபவங்களை தான் நாம் செயல்முறை அனுபவம் என்கிறோம். இதே போன்ற அனுபவம் எனக்கும் நடந்தது. நான் ஆண்டிராய்ட் தொலைப்பேசி வாங்கி பல மாதங்கள் ஆகிவிட்டன. இரண்டு நாட்களுக்கு முன் எனது தொலைப்பேசியில் தொடர்ந்து குருஞ்செய்திகள் வந்தன. மத்தியம் உணவு இடைவேளயின்பொழுது அவற்றை எவரிடமாவது கொடுத்து படிக்கவேண்டும் என நான் நினைத்துக்கொண்டே இருந்தேன். திடீரென்று எனக்குள்ளே ஒரு எண்ணம் தோன்றியது. இந்த குருஞ்செய்திகளை எப்படியாவது நானாகவே படிக்க முயலவேண்டும் என்பது தான் அந்த எண்ணம். என்னுடைய தொலைப்பேசியை நானாகவே மெசேஜ் என்ற இடத்தை கிளிக் செய்து அதன் உள்ளேயும் சென்றேன். அதர்க்கு மேல் எதுவும் ஓசையில் வரவில்லை. என்றாலும், நானாகவே எனது கீபோடில் விரலை சற்றே கீழ் நோக்கி நகர்த்திப்பார்த்தேன். அவை என்னுடைய குருஞ்செய்திகளை குறல் வடிவில் கேட்டு அவற்றை புரிந்து கொள்ளவும் முடிந்தது. இதோடு நான் நின்று விடவில்லை. மேலும் எவ்வாரு குருஞ்செய்தி அனுப்புவது என்பதையும் கற்றுக்கொண்டேன். இவ்வாரு ஒவ்வொரு அனுபவமும் எனக்கு வித்தியாசமான பாடங்களை கற்றுத்தருகின்றன. இது எனக்கு மட்டுமல்ல அனைவருடைய வாழ்விலும் ஏதாவது ஒரு அனுபவம் இருக்கும். அனுபவமே மனிதன் கற்றுக்கொள்ளும் முதல் பாடமாகும். அனுபவத்தின் மூலம் கற்ற பாடங்களை நாம் மனதில் நினைவு கூர்ந்து அவற்றை பின்பற்றவேண்டும்.

Saturday, November 9, 2013

காலமும் மனிதனும்

மனிதன் பிறந்தது முதல் அவன் இரக்கும்வரை அவனுடைய வாழ்க்கை செல்லும் பாதை ஒரு வித்தியாசமானதாகும். காலையில் தொடங்கும் பயணம், இறவில் தான் முடிகிறது. பயணமென்றால் நான் பேருந்து பயணத்தை கூறவில்லை. வாழ்க்கை என்ற பயணத்தை தான் கூறுகின்றேன். ஒருமுறை காலம் மனிதனை பார்த்து கேட்டதாம், மனிதா உன் கையில் கட்டி இருப்பது என்ன? அதர்க்கு மனிதன் சொன்னானாம் அது கை கடிகாரமென்று. காலம் அவனை அதோடு விடவில்லை அதை வைத்து நீ என்ன செய்வாய் என்று அடுத்த கேழ்வியாக மனிதனை பார்த்து கேட்டது. அதர்க்கு மனிதன் இதை வைத்து நான் என்னுடைய நேரத்தை கணக்கிடுவேன். என்றானாம் மனிதன். காலம் கேட்டது நேரத்தை கணக்கு செய்து நீ உன்னுடைய வாழ்க்கையில் என்ன செய்திருக்கின்றாய் என்றதாம். அதர்க்கு அவனால் பதில் சொல்லமுடியவில்லை. நம்முடைய நிலையும் இதுதான். இருக்கும் நேரங்களை விட்டுவிட்டு இருதியில் தான் நாம் வேகமாக செய்யமுயல்வோம். இது மனித இயல்வு அதை எவராலும் மாற்ற முடியாது. குடிக்கும் ஒரு மனிதன் குடியை மரந்து குடிக்கின்ற நேரம் அவனால் வீணடிக்கப்படுகின்றது. இது ஒரு சிறிய உதாரணம் தான். நாம் வீணடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு பொன்னை வீணடிப்பதர்க்கு சமம். என்பது எந்னுடைய கருத்து. கையில் ஒரு வயதாகும் குழந்தை, அந்த குழந்தையை காட்டி குழந்தைக்கு பால் கொடுக்க கூட காசு இல்லை என்று சாலயில் பிச்சை எடுக்கும் மக்கள் இன்னும் நம்முடைய சமூகத்தில் இருப்பது தான் மிகவும் வேதனை மிக்க ஒரு விஷயம். இதில் உண்மையாகவே எத்தனை மக்கள் அப்படி கஸ்டப்படுகின்றார்களென்று சொல்லமுடியும்? பணம் வேண்டும் என்பதர்க்காக நேரத்தை வீணடித்து வெளியில் எதை வேண்டுமானாலும் செய்பவர்கள் தான் அதிகம். இது சரியானதாக இல்லை. எனவே, நேரமும் காலமும் நமக்கு தருகின்ற நேரத்தை பயன்படுத்துங்கள் என்பது என்னுடைய கருத்து.

Friday, November 8, 2013

கவர்ச்சியும் ்மாயமும்

வியாவார உலகில் இன்று முதலிடத்தில் நிர்ப்பது விளம்பரங்கள் தான். ஆனால் இந்த விளம்பரங்களில் வருகின்ற காட்சிகள் அனைத்துமே கவர்ச்சியை மய்யமாக வைக்கின்றன. காரணம், வியாவாரத்தில் நிலவும் போட்டியில் கவர்ச்சியை மய்யமாக வைத்தால் தான் தங்களுடைய வியாவாரத்தை பெருக்கி கொள்ளமுடியும் என்ற சூழ்நிலையாகும். இந்த கவர்ச்சி பல விதங்களில் விளம்பர பொருட்கள் மீது திணிக்கப்படுகின்றன. ஆனால், இவற்றில் எது விளம்பரங்களில் கூறப்படும் அனைத்து விஷயங்களும் உண்மை என்று எவருக்கும் தெரியாது. மக்களை கவர வேண்டுமென்றால் விளம்பரம் செய்யப்படும் பொருளானது நிரம், லோகோக்கள், மற்றும் அடைமொழிகள் அனைத்தும் புதுமயாக இருக்கவேண்டும். இந்த யுத்தியை தான் வியாவார நிறுவனங்கள் விளம்பரப்பொருட்களில் கையாழுகின்றன. உதாரணமாக நாம் k.f.c. மற்றும் மெக்டொநால்ட் சிக்கன்களை அதிக அழவில் உண்ணுகின்றோம். ஆனால் இதை பற்றிய ஒரு கருத்து கணிப்பு கூருகின்ற கருத்து என்ன தெரியுமா? இந்த கடைகளில் பயன்படுத்தப்படும் சிக்கன்களின் மீது ஒரு வகையான வாத்தின் கொழுப்பு தடவப்படுகின்றன. அது மட்டுமல்ல சில வாத்துக்களுக்கு தீனிகள் திணிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. அதனால் இந்த வாத்துக்கள் இறந்து விடுகின்றன. இதன் கொழுப்பை சிக்கன் மிருதுவாக இருக்கவேண்டும் என்பதர்க்காக சிக்கன்கள் மீது தடவப்படுகின்றன. அதனால் இந்த சிக்கன்களை உண்ணும் நமக்கு பல நோய்கள் உண்டாவதாகவும் அந்த ஆராய்ச்சி குறிப்பிடுகின்றது. இவ்வாரு விளம்பரங்களில் சொல்வது ஒன்்று நேரில் நடப்பது மற்றொன்று என்ற நிலயில் தான் சென்றுகொண்டிருக்கின்றோம். அது மட்டுமல்ல, சில பேர் விளம்பரத்தில் சத்தானது என்று ஒரு பொருளை கூறினால் போதும், அதை தான் வாங்க செல்வார்கள். ஏன், நாம் குழியலுக்கு பயன் படுத்துகின்ற சோப்பாக இருந்தாலும் சரி, வேரு எந்த பொருளாக இருந்தாலும் சரி அதில் கவர்ச்சி இருந்தால் அதை யார் வேண்டுமென்றாலும் வாங்கலாம். என்ற நிலை இன்றைய வியாவார உலகில் நிலவுகின்றது. எனவே நாம் ஒரு பொருளை வாங்கும்போது அதை விளம்பரத்தில் வரும் காட்சியை பார்த்து வாங்கக்கூடாது. அதற்க்குபதிலாக நாம் பயன்படுத்துவதில் எந்த பொருள் நன்றாக இருக்கின்றதோ அவற்றை நாம் வாங்க வேண்டும். என்பது என்னுடைய கருத்து. அடைமொழிகள் அதிகம் பயன்படுத்துகின்ற விளம்பரங்கள் அனைத்துமே உண்மை இல்லை என்பதும் என்னுடைய கருத்து.

Monday, November 4, 2013

இனிமையான அனுபவம்

இன்று காலை வளக்கம் போன்று தொடங்கிய ஒரு பயணம் எனக்கு நல்லதொரு அனுபவத்தைப்பெற்றுத்தந்தது. காலை பத்து மணி நார்ப்பத்தைந்து நிமிடம், என்று காட்டிய எனது கைகடிகாரம், சென்னை n.s.k. நகரிலிருந்து பூவிருந்தமல்லிக்கு செல்வதர்க்காக 153 b என்ற பேருந்தில் ஏரி அமர்ந்தேன். அண்ணா கரயாஞ்சாவடி போகுமா? என்று நடத்துனரிடம் கேட்டுக்கொண்டே பேருந்தில் ஏரி அமர்ந்தேன். அவரும் ாமாம் சார் போகும் உக்காருங்க. என்று சொன்னார். அதன் பிறகு நடத்துனர் என்னிடம், சார் பாஸ் இருக்கா? என்று கேட்க, நானும் ஆமாம் இருக்கு அண்ணா என்றேன். கூட்டமும் சொல்லும் அளவிர்க்கு அந்த பேருந்தில் இல்லை. நீங்க வேலை செய்யுரீங்களா சார்? நானோ அந்த நடத்துனரிடம் ஆம் என்று கூறினேன். அப்போது அவர் என்னிடம் பேசிக்கொண்டே வந்தார். அவர் தான் என்னைப்போன்று பார்வயற்றவர்களிடம் மிக்க மரியாதை வருவதர்க்கான காரணத்தை என்னிடம் கூறினார். அதில் பின்வரும் ஒரு நிகழ்ச்சியையும் கூறினார். 1984 ஆம் ஆண்டில் சென்னை பூவிருந்தமல்லியிலுள்ள அரசு பார்வயற்ற பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு எழுத்தராக சென்றிருந்தேன். அப்போது தான் என்னுடைய பள்ளிப்படிப்பை முடித்த காலமது. அவர்களுக்கு நான் வினா தாழில் உள்ள வினாக்களை வாசிக்கும்போது அவர்கள் அதர்க்குச்சரியாக விடைகளைக்கூருவார்கள். அது மட்டுமல்ல ஒருமுறை ஒருவருக்கு நான் தேர்வை எழுதிவிட்டு அவரோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் அலைகள் ோய்வதில்லை என்ற திறைப்படத்தின் கதயை அப்படியே ஒரு சிரிய காட்சிக்கூட தவராமல் கூறினார் என்று அவர் தனது வாழ்வில் பார்வையற்றவர்கள் மீது அதிக மதிப்பு வருவதர்க்கு இவையெல்லாம் ஒரு காரணம் என்று கூறினார். அதன் பிறகு நாங்களும் பேசிக்கொண்்டே சென்றோம். நான் இறங்கும் இடமும் வந்தது. இந்த மாதிரி எந்த ஒரு நடத்துனரும் என்னோடு பேசியதில்லை. அது மட்டுமல்ல, ஒருவர் தானாகவே என்னைப்போன்றவர்களிடம் பேசுகின்றார் என்றால் அதை நாங்கள் ஒரு பெரிய ஆச்சரியமாக தான் பார்ப்போம். காரணம், இன்றைய காலகட்டத்தில் எங்களுக்கு ஒருவர் ஏதாவது ஒரு உதவி செய்யவேண்டுமென்றால் அதற்க்கு அவர் பலமுறை சிந்தித்து அதன் பிறகு தான் முன் வருவார். இது சென்னையில் ஓரளவிர்க்கு அனைவரும் பார்வையற்றவர்களுக்கு சாலையை கடக்க உதவி செய்வது அல்லது எங்காவது செல்லவேண்டுமென்றால் எளிதில் உதபுவார்கள். ஆனால், பல மாவட்டங்களில் இத்தகைய விழிப்புணர்வு பொது மக்களிடம் இல்லை. ஏன், என்னுடைய வாழ்க்கையிலேயே ஒரு சம்பவம் நடந்தது. ஒருமுறை நான் என்னுடைய ஊருக்கு சென்னையிலிருந்து சென்றுகொண்டிருந்தேன். நாகர்க்கோவிலிலிருந்து மார்த்தாண்டம் செல்வதர்க்கு பேருந்து ஏறவேண்டிய நேரம் அது ஆனால், நான் இங்கிருந்து எதிர்முனைக்கு சாலையை கடக்கவேண்டும். அதர்க்காக பலரிடம் நான் உதவி கேட்டுக்கொண்டிருந்தேன். எவரும் சாலையை கடக்க உதபவில்லை. அனைவரும் சொன்ன ஒரு பதில் என்ன தெரியுமா? சார் எனக்கு அலுவலகத்திர்க்கு நேரமாச்சு. மற்றொருவர் என்னிடம் பேருந்து நிக்குது எனக்கு இடம்பிடிக்க வேண்டும். என பல சாக்குகளை சொன்னார்கள். ஒரு நிமிடத்தில் கடக்க வேண்டிய சாலைக்கு நான் பிறரிடம் உதவி கேட்டு நின்ற நேரம் எவ்வளவு தெரியுமா? சுமார் அறை மணி நேரம். அந்த நேரத்தில் நான் என்னுடைய மனதில் சென்னையை நினைத்தேன். காரணம், இங்கெல்லாம் சாலயை கடக்க வேண்டுமென்றால் ைந்து நிமிடத்திர்க்கு மேல் நான் நின்றது கிடையாது. இதர்க்கு நாம் எவரையும் குறை கூற முடியாது. மக்களிடத்தில் எங்களைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாதது தான் காரணம். இவற்றையெல்லாம் களைய வேண்டுமென்றால், என்னைப்போன்றவர்களோடு நீங்கள் பேசி எங்களைப்பற்றிய சந்தேகங்களை பேசி தெரிந்து கொள்ளலாம். என்பது என்னுடைய கருத்து.

Sunday, November 3, 2013

திகிலின் மரு பக்கம்

பயம், இதன் மரு உருவம் தான் திகில். காரணம், சில அதீதமான பயம் உச்சிக்கே சென்றுவிட்டால் அது பல பீதிகளையும் சில அனுபவங்களையும் நமக்கு கொடுக்கும். சிலர் நம்மிடத்தில் அவர்கள் வாழ்வில் நடந்த சில நிகழ்ச்சிகளை கூறும்போது நமக்கே சில நிமிடங்களில் நம்மை அறியாத ஒரு பயம் ஏற்ப்படும். இது தான் மனித இயல்வு. ஆனால், சிலர் திரில் கதைகளையும் நம்மிடத்தில் கூறுவார்கள். அந்த கதைகள் அனைத்தும் போலியாக இருந்தாலும் நாம் அவற்றை கேட்கும்பொழுது நேரில் நடப்பது போன்று நினைத்து நாம் சில நிமிடங்கள் பயந்து விடுவோம். இதற்க்கு ஒரு சான்று, நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது பாலசுப்பிரமணி என்ற ஒரு அண்ணா ைந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தார். அவர் வாரந்தோரும் சனிக்கிழமைகளில் பேய் கதைகளை கூறுவார். அதை கேட்டு நாங்கள் பயந்துவிட்டு ஒருவரை ஒருவர் மாற்றி கிண்டல் செய்தும், நக்கலடித்தும் எங்களுடைய பயத்தை போக்கிக்கொள்வோம். ஆனால் எவருமே பயத்தை எளிதில் வெளிப்படுத்திக்கொள்ளமாட்டோம். இவர் கூரும் கதைகளில் வரும் சில சம்பவங்கள் நேரில் நடப்பது போன்றே இறுக்கும். ஆனால் இவருடைய கதை படைப்பாற்றல் தான் இந்த திகிலூட்டும் கதைகளின் மருபக்கம். அவருடைய கதைகளனைத்தும் சில நேரங்களில் நான் நினைத்து பார்த்ததுண்டு. நாம் பள்ளியில் பயின்ற சில கதைகளில் வரும் நிகழ்வுகள் ஏதோ ஒரு உச்சகட்டமான பயத்தை ஏற்ப்படுத்தும். ஆனால், அக்கதைகளில் வரும் முடிவானது ஏதோ ஒரு சாதாரணமான கதை கேட்டது போன்ற ஒரு முடிவை தான் கொடுக்கும். உதாரணமாக நாம் அனைவரும் அறிந்த ஒரு கதை, இரண்டு நண்பர்கள் காட்டிற்க்கு செல்கின்றார்கள். திடீரென்று கரடி வந்து விடுகின்றது. இதை பார்த்த நண்பர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து போனார்கள். அப்போது ஒருவன் மரத்தின் மீது ஏரிக்கொண்டான். ஆனால், மற்றொருவனுக்கோ மரமேரத்தெரியாது. அவன் இறந்தவன் போன்று நடித்தான். கரடியோ அவனை நுகர்ந்து பார்த்து அவன் இறந்து விட்டான் என்று நினைத்து வந்த வழியே திரும்ப சென்று விட்டது என்பது தான் கதை. இக்கதையில் கரடி வருவது ஒரு திகிலாக இருந்தாலும் அந்த நேரத்தில் அவர்கள் இருவரும் தனது சமயோஜித அரிவை பயன்படுத்தி அவர்கள் இருவரும் தப்பிப்பது தான் ஒரு முடிவாகும். ஆனால் ஒரு நிமிடம் நாம் சிந்தித்து பார்க்கவேண்டும். கரடிக்கு மரமேரத்தெரியும். அவன் மரத்தின் மீது ஏரினாலும் கரடி மரத்தின் மீதேரி அவனைக்கொல்லும். இது தான் உண்மயில் நிகழும். ஆனால் கதையில் சொல்லப்பட்ட முடிவானது பொயியாக இருந்தாலும் எழுத்தாளருடைய படைப்பாற்றல் தான் இந்த திகிலான கதையின் மருபக்கம். இதேப்போன்று பேய்கள் பற்றிய கதைகளை நாம் அதிக அழவில் கேழ்வி பட்டிருப்போம். ஆனால், உண்மயிலேயே பேய்கள் உள்ளதா என்பது நமக்கு தெரியாது. ஆனால் சிலப்பேர் தாங்கள் பேய்களை நேரில் பார்த்ததாக கூறுவார்கள். அதற்க்கு சில நிகழ்ச்சிகளை கூறி மற்றவர்களையும் நம்ப வைத்து விடுவார்கள். அது உண்மையா, அல்லது பொயியா என்பது எவருக்கும் தெரியாது. ஆனால் இத்தகையவர்களுடைய கதைகளை நம்புவதும், நம்பாமல் இருப்பதும் நமது விருப்பம். மனிதன் உண்மையிலேயே ஒரு கவிஞன். அவன் வடிக்கும் கதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேரு விதமாக உள்ளன என்பது தான் உண்மை. எனவே நாம் நம்முடைய படைப்புகளை சிந்தித்து பயன்படுத்தினால் அது அனைவருக்கும் மகிழ்ச்சியை தரும் என்பது என்னுடைய கருத்து.