Saturday, November 16, 2013

வட்டமடித்த நினைவலைகள்

நவம்பர் 14 ஆம் தேதி என்றால் அனைவருக்கும் நினைவிர்க்கு வருவது குழந்தைகள் தினம் தான். எனக்கும் அதேப்போன்று தான். 14 ஆம் தேதி அன்று பேருந்தில் அலுவலகம் செல்வதர்க்காக பயணம் செய்துகொண்டிருந்தேன். வள்ளுவன் சிலை என்ற இடம் வந்ததும் சில மாணவர்கள் கூட்டமாக பேருந்தில் ஏரினார்கள். குழந்தைகள் தினம் என்பதால் இவர்களுக்கு விடுமுறை அழித்திருப்பார்கள் என்று நான் நினைத்தேன். அப்போது என் பள்ளி வாழ்க்கை நினைவுகள் மெல்ல மெல்ல மனதை வட்டமடித்துக்கொண்டிருந்தன. முதல் முதலில் நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது மேடையில் பேசிய கவிதை, அதர்க்காக நான் பெற்ற பரிசுகள், அந்த கவிதையை எழுதி பேசுவதர்க்்கு சொல்லித்தந்த சாமண்டீஸ்வரி அக்கா, மேடையிலே பேசும்போது ஏர்ப்பட்ட ஒரு பயம் ஆகியவை என்னுடைய மனதை மீண்டும் மீண்டுமாக வட்டமடித்தன. அது மட்டுமல்ல பள்ளியில் நாங்கள் செய்த சேட்டைகள், அதர்க்காக மாட்டி உதை வாங்கிய நாட்கள் போன்றவை என்னுடைய மனதை விட்டு இன்றும் நீங்காமல் வட்டமடித்துக்கொண்டே இருக்கின்றன. நான் பேருந்திலிருந்து இறங்கும் இடம் வந்தது. அப்போது என் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த மாணவனை பார்த்து கேட்டேன் தம்பி நீ எந்த வகுப்பு படிக்கின்றாய்? அதர்க்கு அவன் ஆராம் வகுப்பு அண்ணா என்று கூறினான். குழந்்தைகள் தினம் என்பதால் தான் உங்களுக்கு விடுமுறையா? என்று நான் அவனிடம் கேட்டேன். அவனோ அப்படி எல்லாம் இல்லை அண்ணா எங்கள் பள்ளியில் பணிபுறியும் ஆசிரியர் ஒருவர் நேற்று மாலை காலமானார் அதனால் தான் எங்களுக்கு விடுமுறை விட்டார்கள் என்று கூறினான். எனக்கும் இறங்கும் இடம் வந்தது நானும் பேருந்திலிருந்து இறங்கி விட்டேன். அப்போது தான் என்னுடைய மனதில் தோன்றியது நாம் தவறாக கணித்துவிட்டோமென்று. என்றபோதும்் என் பள்ளி வாழ்க்கையை இன்றழவும் மறக்கமுடியவில்லை என்பது தான் உண்மை.

No comments:

Post a Comment