Monday, October 21, 2013

எனக்குப்பிடித்த திறைப்பட பாடல்களும் நான் கற்ப்பனை செய்தவிதங்களும்.

திறைப்பட பாடல்கள் என்றால் அது நமக்கெல்லாம் சற்றே மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு மருந்தாகும். அதிலும் சில இடைக்காலப்பாடல்கள் என்றால்? அது நம்முடைய மனதை ிளகச்செய்து நம்மை மிகவும் சாந்தமான நிலைக்கு அழைத்துச்சென்று விடும். அந்த வரிசயில் நான் ரசித்த சிலப்பாடல்களயும் அத்துடன் அவற்றை கேட்கும்போது எனது மனதிலே எழும் சில உணர்வுப்பூர்வமான கற்ப்பனைகளயும் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். ஒருகாலத்திலே பழய பாடல்கள் என்றால் எனக்கு அவ்வளவாக பிடிக்காது. ஆனால், நான் முதல் முதலில் பழைய பாடல்களை ரசிக்க துவங்கியது என்னுடைய பள்ளிப்பருவம் முடியும்போது தான். அந்த நேரத்திலே ரேடியோமிர்ச்சி என்ற பண்பலையில் தினமும் இறவு ஒன்பது மணி முதல் இறவு பதினொன்று மணிவரை மிர்ச்சிகோல்ட் என்ற நிகழ்ச்சியை ஒலிபரப்புவார்கள். அதிலே தான் நான் முதல் முதலில் பழையப்பாடல்களை கேட்கத்துவங்கினேன். அதிலிருந்து பழையப்பாடல்கள் என்றால் அது எனக்கு அவ்வழவு பிரியம். பாலைவனச்சோலை என்கின்ற படத்திலே வரும் மேகமே என்றப்பாடல் இன்றும் என் மனதிலே ரீங்காரமிடும் பாடல்களில் ஒன்றாக மாறிவிட்டது. இந்த பாடலை கேட்கும்போது தனிமயிலே நடந்து செல்லும் ஒரு மனிதர், மழை வராதா என்று ஏங்கும் ஒரு காலச்சுவடு, அந்த நேரத்திலே மேகங்கள் குளிர்ந்து மழைப்பொழியும் அற்ப்புதமான காட்சிகள், அதை அப்படியே பாட்டாகப்பாடும் ஒரு பெண்மணி போன்ற கற்ப்பனை நிகழ்வுகள் மனதை அசைபோடுகின்றன. இரண்டாவதாக எனக்கு மிகவும் பிடித்த ஒருப்பாடல் ஒரு கொடியில் இரு மலர்கள் என்ற திறைப்படத்தில் வரும் உப்பைத்தின்றவன் தண்ணி குடிப்பான் என்று தொடங்கும் ஒருப்பாடல். சௌந்தரராஜன் அவர்களின் குறல் வளம் இந்த பாடலை மேலும் மெருகூட்டுவதாக உள்ளது. இப்பாடலில் தவறு செய்த ஒரு மனிதன் தான் தண்டனையை எதிர் நோக்கும் நேரத்தில் அனைவருக்கும் புத்தி சொல்லிக்கொடுக்கும் பாடலாக என்னுடைய மனதிர்க்கு தோன்றுகிறது. அந்த பாடல் வரிகளிலே வரும் ஒவ்வொரு வார்த்தையும் அவ்வளவு அருமையானவையாகும். இதிலே என்னுடைய மனதை கவர்ந்த வரிகள் என்றால் பாடலின் நடுவே வருகின்ற வசனங்களாகும். அரிசியின் மேலே அவன் அவன் பெயரை ஆண்டவன் எழுதிவைத்தான் அதை அடுத்தவன் யாரும் கெடுப்பதற்கில்லை அவனவன் தின்றே தீர்ப்பான். என்ற வசன வரிகள் வாழ்க்கை என்ற பயணத்தின் உண்மை நிலையை எடுத்து சொல்கின்றன. இதன் முக்கிய பொருள் என்னவென்றால் மனிதன் தன்னுடைய வாழ்க்கையிலே அவனுடைய நிலையை அவன் தான் தீர்மானிக்கின்றான் அதை வேரு ஆட்கள் யாரும் தீர்மானிப்பதில்லை. என்ற பொருளாகவே நான் கருதுகின்றேன். மூன்றாவது பாடலாக என் மனதில் ஒலிக்கும் மற்றொரு பாடல் பச்சைவிளக்கு என்ற திறைப்படத்தில் வரும் தூது சொல்ல ஒரு தோழி இல்லை என துயர் கொண்டாயோ தலைவி என்றப்பாடல். தொலைதூரம் சென்ற தலைவன், அவன் என்று வருவான் என காத்திருக்கும் தலைவி, தலைவனை காணத்துடிக்கும் அவளது கண்கள், தலைவிக்கு உதவ நினைக்கும் தோழி, தலைவனை காணவேண்டுமென ஏங்கும் அவளது இதயம், தனது வருத்தத்தை தோழியிடம் சொல்லும் தலைவியின் மனம் என பலவிதமான கற்ப்பனைகளை அந்த பாடலை கேட்கும்போது எனக்கு தானாகவே வரும். நான்காவதாக என் மனதை கற்ப்பனைக்கு அழைக்கும் பாடல் என்றுச்சொன்னால் அது நந்து என்ற திறைப்படத்திலே வரும் அள்ளித்தந்த பூமி என தொடங்கும் பாடல். இந்த பாடலானது ஒரு கிராமத்தில் னாம் தங்கும் உண்மையான உணர்வினை அழிக்கின்றன. நீண்ட நாட்களுக்கு பிறகு கிராமத்திற்கு செல்லும் ஒரு மனிதர், கிராமத்தில் தான் வாழ்ந்த வாழ்க்கையை தனது சக நண்பர்களோடு பஹிரும் நினைவலைகள், தோட்டங்களை சுற்றிக்காட்டும் முதியவர், என்றும் பச்சை மாராமல் நிமிர்ந்து நிற்கும் வயல்வெளிகள், வயக்காட்டு வாசம். போன்ற அருமையான நினைவுகளை மனதிலே கொண்டு வரும் பாடலாக இப்பாடல் திகழ்கின்றது. ஐந்தாவதாக என் மனதிலே ஒலிக்கும் ஒரு பாடல்: சத்திரியன் என்ற திறைபடத்திலே வரும் மாலயில் யாரோ மனதோடு பேச என்று தொடங்கும் பாடலாகும். இந்த பாடலை கேட்கும்போது தனிமயிலே ஒரு மனிதன், அவன் மனதிலே உள்ள ஒரு சோகத்தின் நிலை, கடல்வெளியில் அமர்ந்திருக்கும் காதல் ஜோடிகள், குழந்தைகள் ஓடி ஆடும் மணல்வெளிகள், காதலர்களுக்கு இடயே வரும் பிரிவுகள், மநமுடைந்து பாடும் காதளி என்று பல அருமையான நினைவலைகளை இந்த பாடல் என் கண் முன்னே வருகின்றன. இவ்வாரு பாடல்களை கேட்ட எனக்கு மனதில் தோன்றிய கற்ப்பனைகள் ஏறாளம். ஆயிரம் பாடல்கள் வந்தாலும் கற்ப்பனை உணர்வு மனதை லட்சக்கணக்கான பாடல்களுக்கு இணையாக ஈற்த்துச்செல்கின்றன என்பது தான் ுண்மை.

No comments:

Post a Comment