Tuesday, December 31, 2013

புத்தாண்டு வாழ்த்துப்பா

நல்லெண்ணத்தோடு வரவேர்க்கும் புத்தாண்டு. பழயன கழைந்து புதிய எண்ணங்களோடு காத்திருந்து 2014 புத்தாண்டே உன்னை இப்புவிக்கு வரவேற்க்கின்றோம். ஏழைகள் வாழ்வு மலர்ந்திட, துன்புற்றவர்களுடைய வாழ்வு இன்புற்றிட புத்தாண்டே நீ இப்புவிக்கு வருதல் வேண்டும். வளமையற்ற பூமியில் வளமை செழித்திட, மழைக்காக காத்திருக்கும் விவசாயி, விடியலை நோக்கி காத்திருக்கும் நல் மக்கள் போன்றவர்களுக்கு இப்புத்தாண்டே நீ நல்லாண்டாய் மலரவேண்டும். சமதர்மம் வளரவும், அநீதிகள் மரைந்து நீதி செழிக்கவும் புத்தாண்டே நீ உதவ வேண்டும். எல்லோரும் ஒன்று என்ற ஒற்றுமை உணர்வு மக்களிடம் மலர இப்புத்தாண்டு நமக்கு வழிகாட்டும் என்ற நம்பிக்கயில் இந்த புத்தாண்டை வரவேர்ப்போம். அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

Friday, December 13, 2013

Tuesday, December 3, 2013

படித்த சில உண்மைகள்

சில தினங்களுக்கு முன்னால் என்னுடைய மின்னஞ்சலுக்கு ஒரு குருஞ்செய்தி ஒன்றை ஒரு நண்பர் அனுப்பி இருந்தார். அதன் தலைப்பு கசக்கும் உண்மைகள் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலே சில உண்மைகள் குறிப்பிடப்பட்டிருந்தன. பீட்ஸாவை நாம் ஆடர் செய்தோமென்றால் உடனடியாக வீட்டிற்க்கு வந்து விடுகின்றன. ஆனால், ஒரு ாம்பளேன்ஸ் மற்றும் தீ அணைப்பு வண்டிகளை நாம் உடனடியாக அழைத்தால் அவை உடனடியாக வருவதில்லை. என்ற ஒரு உண்மயை அவர் சொல்லாமல் சொல்லியிருந்தார். அதற்க்கு அடுத்தப்படியாக அந்த மின்னஞ்சலில் குறிப்பிட பட்டிருந்த ஒரு உண்மை என்ன தெரியுமா? சிம் காடுகள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் அனைவருக்கும் தேவையான கல்வியானது இலவசமாக கிடைப்பதில்லை. என்ற உண்மை தான் அது. இன்றும் நம்முடைய நாட்டில் எத்தனை மக்கள் அடிப்படை கல்வி கூட பெறமுடியாமல் கடினப்படுகின்றார்கள் என்பது நமக்கு தெரியும். அதர்க்கு முக்கிய காரணம் அவர்களுடைய வருமயாகும். பல தன்னார்வ தொண்டு நிருவனங்கள் கூடுமான அழவிர்க்கு ஏழ்மை நிலயில் உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவி செய்ய முன் வந்தாலும் அவர்களால் முழுமையாக அவற்றை நிறைவேற்ற முடியவில்லை என்பது தான் உண்மை. இந்த நிலை மாறவேண்டும். இன்று உலக ஊனமுற்றோர் தினம். ஆனால் இன்றைய நிலயில் மாற்றுத்திறனாளிகளுடைய வாழ்க்கை ஓரழவிர்க்கு முந்நேரி வந்தாலும், இன்றும் பல மாற்று திரநாளிகள் அடிப்படை கல்வி அறிவில்லாமல் சிறமப்படுகின்றார்கள். குறிப்பாக கிராமப்பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தான் இந்த ஒரு நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள். இதர்க்கு காரணம் அவர்களிடையே விழிப்புணர்வு இல்லை என்பது தான் உண்மை. எனவே நாம் கூடுமான அழவிர்க்கு ஏதாவது ஒரு முறயில் கிராமப்பகுதிகளில் விழிப்புணர்வு ஏர்ப்படுத்த முயர்ச்சிகள் மேர்க்கொள்ளவேண்டும்.