Thursday, October 31, 2013

கட்டுக்கதைகள்

சின்ன வயசு, ெல்லோரும் கதை கேட்டு தான் வளர்ந்திருப்போம். ஆனால், எல்லாநேரங்களிலும் நமக்கு சொல்லப்படுகின்ற கதைகள் அனைத்துமே கட்டுக்கதையாகவே இருக்கும் அதையும் நாம் நம்பி விடுவோம். சிலர் சொல்லும் கட்டுக்கதைகளை கேட்டால் நமக்கே அவை நேரில் நிகழ்வது போன்றே இருக்கும். அவர்கள் சொல்லும் கட்டுக்கதைகளில் வரும் கதாப்பாத்திரங்களும் மிகவும் வித்தியாசமாகவே இருக்கும். அவற்றில் நாம் பட்டியலிட்டு சொல்லவேண்டுமென்றால் அசையும் மரங்கள், பேசும் விலங்குகள், பேசும் பறவைகள், பறக்கும் மீன்கள் என்று பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். அதேப்போன்று கதை சொல்லும் விதங்களும் பார்த்தால் இவர்களே நேரில் சென்று பார்த்துவிட்டு சொல்வது போன்றே ஒரு திரில் இருக்கும். கதையில் வரும் நாயகனை அவர்கள் சொல்லும்பொழுது அவனொரு மாய வித்தைக்காரனைப்போலும், அல்லது அவனை ஒருபடி உயர்த்தி கூறுவது என்று பலக்கோணங்கலிலே கதைகளை நமக்கு சொல்வார்கள். குறிப்பாக பாட்டி தாத்தா சொல்லும் கதைகளை நாம் கேட்டோம் என்றால் அது என்னவோ தெரியாது, மனதை எங்கோ கொண்டு சென்று விடும். கட்டுக்கதைகள் சொல்வதென்றால் பள்ளியில் பயின்ற சில கதைகள் எனது மனதில் இன்றும் நினைக்கத்தூண்டுகின்றன. கதைகளில் வரும் கதாநாயகிகள் என்று பார்த்தால் அவர்களைப்பற்றி கூறுவது தான் மிகவும் சுவாரசியமாக இருக்கும். அவர்களை ஒரு தேவதைப்போன்றும், வேற்று கிரகத்தின் பெண் என்று பல கோணங்களில் விவரித்து கூருவார்கள். அது மட்டுமா, கதையில் வரும் திருடன், போலீஸ், போன்றவர்களுடைய கதாப்பாத்திரங்களை பார்த்தால் அது மிகவும் திரிலாகவே இறுக்கும். அவர்கள் ஏதாவது பறவைகளோடு பேசுவது போன்றும், அல்லது ஏதாவது ஒரு இடத்தில் சென்று அங்கு மற்ற விலங்குகள் உதபுவது போன்றும் இத்தகைய கதாப்பாத்திரங்களை கதைகளில் சித்தரிப்பார்கள். இத்தகைய கதைகள் சிறு குழந்தைகளுக்கு அதிக அளவில் சொல்லிக்கொடுக்க படுகின்றன. நாம் இவற்றை சிந்தித்து பார்த்தோமென்றால் நமக்கே சிறிப்பாக தான் இருக்கும். எனக்கும் இப்படித்தான் ஒரு ஆசிரியர் பல கட்டுக்கதைகளை எங்களுக்கும் கூறுவார். அவருடைய வகுப்பு வந்து விட்டால் போதும், பல மாணவர்களுக்கு கொண்டாட்டம். காரணம், ஏதாவது ஒரு கட்டுக்கதையை அடுக்கடுக்காக கூறிக்கொண்டே இருப்பார். இவருடைய கதைகளில் வரும் பொருட்கள் மற்றவைகளைவிட மிகவும் திரில் மிக்கதாகவே இருக்கும். மந்திரச்சாவி, பேரைச்சொன்னால் சென்று அடிக்கும் கொம்பு, கட்டளை இட்டதை செய்து முடிக்கும் சட்டை, நினைத்ததை கொண்டு வந்து கொடுக்கும் பறக்கும் தட்டு என்று அவர் கூறும் கதைகளின் அம்சம்் அவ்வளவு திரிலாகவும், இருதியில் ஏதாவது ஒரு கருத்தை சொல்வதாகவும் ிருக்கும். எனவே கட்டுக்கதைகளுக்கு அனைவருமே அடிமைகளாக நம்முடைய சிறு பருவம் இருந்திருக்கும். குறிப்பாக அந்த காலத்தில் நம்முடைய தாத்தா பாட்டி போன்ற முன்னோர்கள் நமக்கு சொல்லும் கதைகள் இன்றும் நம்மை அந்தகால நினைவுகளுக்கு அழைத்து சென்றிருக்கும். இந்த காலத்தில் இத்தகைய கட்டுக்கதைகளை கேட்பதென்பது மிகவும் அரிதாகி விட்டது. எனவே இத்தகைய கதைகளை நாம் இன்று திறைப்படங்களிலும், ஏதேனும் ஒரு தொலைக்காட்சி நாடகத்திலோ தான் நாம் காண முடிகின்றது. இத்தகைய கதைகளை கேட்பதால் நமக்கு உண்டாகும் ஒரு பயன் என்ன தெரியுமா? நம்முடைய கதை படைப்பாற்றல் அதிகமாகும். சிந்தனைகளை ஆழப்படுத்தி பல புதிய கற்ப்பனைகளை உருவாக்க முடியும் என்பதே நான் என்னுடைய அனுபவத்தில் கண்ட உண்மை. கற்றுத்தரும் அனுபவங்களை நாம் பாடமாக எடுத்து மற்றவர்களுக்கும் எடுத்துச்சொல்லுவோம்.

No comments:

Post a Comment