Wednesday, October 23, 2013

பயணங்கள்

பயணம் என்பது அனைவருடய வாழ்விலும் முக்கியமான ஒன்றாக விளங்குகின்றது. பலவிதமான பயணங்களை நாம் மேற்கொண்டிருப்போம், ஆனால் ஏதாவது ஒரு பயணம் நம்முடைய வாழ்வில் மரக்க முடியாத ஒரு பயணமாக மாரி இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. எனக்கு நீண்ட தூரம் செல்வதென்பது மிகவும் பிடித்த ஒன்றாகும். ரயில் பயணம் என்றால் அது எனக்கு மிகவும் ஆநந்தம். என்னால் மரக்க முடியாத ஒரு பயணம் என்றால் பள்ளிக்கூடத்தில் படிக்கும்பொழுது நாங்கள் செல்லும் சுற்றுள்ளாவாகும். குறிப்பாக நான் ஆராம் வகுப்பு படிக்கும்போது ஹைத்ராபாத்திலே மேற்கொண்ட ஒரு சுற்றுள்ளாவாகும். அப்போது நாங்கள் இந்திய அணியின் முந்நால் கிரிக்கெட் வீரர் மொஹமது அசாருதீன் பயின்ற பள்ளியில் தான் நாங்கள் மத்திய உணவு மேற்கொண்டோம். அங்கே ஒரு ஆச்சரியம் என்னவென்றால் ஒரு வயதான மூதாட்டி பள்ளியை சுத்தம் செய்பவர் ஆங்கிலம் பேசியது தான். இதே போன்று நாங்கள் சென்ற பல சுற்றுள்ளா அனுபவங்கள் என்னுடைய மனதிலே இன்றழவும் நிலைத்திருக்கின்றன. என்னுடைய இருதி பள்ளி சுற்றுள்ளா என்பது கொயம்பத்தூர் மற்றும் ஊட்டியிலே நாங்கள் மேற்கொண்ட சுற்றுள்ளா தான். அந்த நேரத்திலே 12 ஆம் வகுப்பு பயின்ற என்னுடைய சக நண்பர்களோடு எடுத்த புகைப்படங்கள், பேருந்திலே நாங்கள் அடித்த அரட்டைகள், தங்கும் இடத்திலே எங்களுக்குள்ளே எழுந்த சிறு சிறு சண்டைகள் ஆகியவற்றை நினைத்தால் இன்றும் என் பள்ளி அனுபவங்கள் மனதிலே அசைவாடிக்கொண்டிருக்கும். ஒருமுறை பேருந்து பயணத்தின்போது நடந்த ஒரு உண்மை நிகழ்வை இங்கே பஹிர்கின்றேன். பேருந்து நிலயத்திலிருந்து புறப்பட தயாரான நேரம் அது. அவசர அவசரமாாக வந்து பேருந்தில் ஏரி அமர்ந்த ஒரு பெண்மணி தான் போக வேண்டிய இடத்திற்கான பயணச்சீட்டை நடத்துனரிடமிருந்து பெற்றுக்கொண்டாள். அதன் பிறகு பேருந்து புறப்பட்டது. இருக்கயில் அமர்ந்த படியே தான் சாப்பிடுவதற்காக தந்நிடமிருந்த இட்டலிப்பாத்திரத்தை திறந்தாள். அப்போது திடீரென இட்டிலி பாத்திரமானது கீழே விழுந்தது. அருகிலிருந்த அனைவரும் அந்த பெண்மணியை திட்டினார்கள். அந்த கூட்டத்திலே இருந்த ஒரு சிருவன் அப்பெண்மணியிடம் ஆண்டி நீங்க பசிக்கிதுணு தானே சாப்பிடத்தொடங்கினீங்க? அது தெரியாமல் தானே கீழே விளுந்திடுச்சி? என்கிட்ட இட்டிலியும் சிறிதளவு மிழகாய் பொடியும் இருக்கு அதை நான் தரட்டா? என்று அந்த சிருவன் அந்த பெண்மணியிடம் கேட்டதும் அனைவரும் ஒரு நிமிடம் அந்த சிறுவனை பார்த்து ஆச்சரியமடைந்தார்கள். இதிலே ஒரு முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் எவருக்குமே தோன்றாத ஒரு சிந்தனை அந்த நேரத்தில் அந்த சிருவனுக்கு தோன்றியதென்பது தான்.

No comments:

Post a Comment