Thursday, November 14, 2013

அனுபவம் கற்றுத்தரும் பாடம்

அனுபவங்கள் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பாடத்தை நமக்கு கற்று தந்து கொண்டே இருக்கின்றன. அவை நாம் பயிலும் புத்தகத்தில் உள்ள பாடங்களை விட இன்னும் ஒருபடி மிகுதியாக நமக்கு கற்று தருகின்றன. இத்தகைய அனுபவங்களை தான் நாம் செயல்முறை அனுபவம் என்கிறோம். இதே போன்ற அனுபவம் எனக்கும் நடந்தது. நான் ஆண்டிராய்ட் தொலைப்பேசி வாங்கி பல மாதங்கள் ஆகிவிட்டன. இரண்டு நாட்களுக்கு முன் எனது தொலைப்பேசியில் தொடர்ந்து குருஞ்செய்திகள் வந்தன. மத்தியம் உணவு இடைவேளயின்பொழுது அவற்றை எவரிடமாவது கொடுத்து படிக்கவேண்டும் என நான் நினைத்துக்கொண்டே இருந்தேன். திடீரென்று எனக்குள்ளே ஒரு எண்ணம் தோன்றியது. இந்த குருஞ்செய்திகளை எப்படியாவது நானாகவே படிக்க முயலவேண்டும் என்பது தான் அந்த எண்ணம். என்னுடைய தொலைப்பேசியை நானாகவே மெசேஜ் என்ற இடத்தை கிளிக் செய்து அதன் உள்ளேயும் சென்றேன். அதர்க்கு மேல் எதுவும் ஓசையில் வரவில்லை. என்றாலும், நானாகவே எனது கீபோடில் விரலை சற்றே கீழ் நோக்கி நகர்த்திப்பார்த்தேன். அவை என்னுடைய குருஞ்செய்திகளை குறல் வடிவில் கேட்டு அவற்றை புரிந்து கொள்ளவும் முடிந்தது. இதோடு நான் நின்று விடவில்லை. மேலும் எவ்வாரு குருஞ்செய்தி அனுப்புவது என்பதையும் கற்றுக்கொண்டேன். இவ்வாரு ஒவ்வொரு அனுபவமும் எனக்கு வித்தியாசமான பாடங்களை கற்றுத்தருகின்றன. இது எனக்கு மட்டுமல்ல அனைவருடைய வாழ்விலும் ஏதாவது ஒரு அனுபவம் இருக்கும். அனுபவமே மனிதன் கற்றுக்கொள்ளும் முதல் பாடமாகும். அனுபவத்தின் மூலம் கற்ற பாடங்களை நாம் மனதில் நினைவு கூர்ந்து அவற்றை பின்பற்றவேண்டும்.

No comments:

Post a Comment