Tuesday, November 19, 2013

நாடக நினைவலைகள்

பொதுவாக வேஷம் என்பது நாடகங்களில் போடுவது நாம் கண்டுகொண்டே இருக்கின்றோம். ஆனால், அந்த வேஷங்கள் நகைச்சுபை மிக்கதாக இருக்கவேண்டுமென்றால் சில குறிப்பிட்ட வேஷங்களை நாடகங்களில் பயன்படுத்துவது வழக்கம். குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால், கோமாளி போன்ற வேஷம், திருடன் போலீஸ் வேடம் என்று சொல்லிக்கொண்டேப்போகலாம். இவை எல்லாம் உடல் அசைவாலும், முக பாவனையாலும் கொடுக்கப்படுகின்ற நகைச்சுபையாகும். ஆனால், உடலசைவில்லாமல் கூட வேடமிட்டு மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தமுடியும் என்பது என்னுடைய பள்ளிப்பருவ வாழ்க்கை ஒரு சான்றாகும். நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் ஆண்டுவிழாவின்போது களியுகத்தில்காந்தி என்ற ஒரு நாடகம் மேடையிலே நடித்துக்காட்டப்பட்டது. அதாவது இன்றைய காலகட்டத்தில் காந்தி மீண்டும் பூமிக்கு வந்தால் எப்படியிருக்கும் என்பது தான் கதை. அந்த நாடகத்தில் நான் காந்தி சிலையாக நடித்த நினைவுகள் இன்றும் என் மனதை விட்டு நீங்காமல் நிர்க்கின்றன. காரணம், அதன் பிறகு என்னை பெரும்பாலும் பள்ளியில் நடிக்கும் நாடகங்களுக்கு சிலையாக நடிக்க வாய்ப்பு கொடுப்பார்கள். அந்த நாடகத்தில் என்னுடைய நண்பன் ஷதீஷ் பேசிய வசனங்கள் மற்றும் அந்த நாடகத்தில் காந்தி தாத்தாவாக நடித்த விக்காஷ் அண்ணா, எமதர்மனாக நடித்த கார்த்திக் அண்ணா ஆகியவர்களை இன்றும் என்னுடைய மனதை விட்டு நீங்காத ஒரு இடத்தைபிடித்துள்ளார்கள். இதை பற்றி ொருமுறை நான் இன்குளூசிவ்பிளானெட் இணயதளத்திலும் ொரு குறிப்பு கொடுத்திருந்தேன். இந்த நாடகத்தின் ஒரு சிறப்பு என்னவென்றால், நாங்கள் முதல் முதலில் நேரடியாகப்பேசி நடிக்காமல் படத்தில் வருவது போன்று டேப்ரெக்காடில் பதிவு செய்து அதர்க்கேற்றவாரு நாங்கள் நடித்தது தான். இவ்வாரு என்னுடைய நாடகத்தில் மறக்க முடியாத ஒரு நினைவை உங்களோடு நான் பகிர்ந்துகொண்டேன்.

No comments:

Post a Comment