Monday, November 4, 2013

இனிமையான அனுபவம்

இன்று காலை வளக்கம் போன்று தொடங்கிய ஒரு பயணம் எனக்கு நல்லதொரு அனுபவத்தைப்பெற்றுத்தந்தது. காலை பத்து மணி நார்ப்பத்தைந்து நிமிடம், என்று காட்டிய எனது கைகடிகாரம், சென்னை n.s.k. நகரிலிருந்து பூவிருந்தமல்லிக்கு செல்வதர்க்காக 153 b என்ற பேருந்தில் ஏரி அமர்ந்தேன். அண்ணா கரயாஞ்சாவடி போகுமா? என்று நடத்துனரிடம் கேட்டுக்கொண்டே பேருந்தில் ஏரி அமர்ந்தேன். அவரும் ாமாம் சார் போகும் உக்காருங்க. என்று சொன்னார். அதன் பிறகு நடத்துனர் என்னிடம், சார் பாஸ் இருக்கா? என்று கேட்க, நானும் ஆமாம் இருக்கு அண்ணா என்றேன். கூட்டமும் சொல்லும் அளவிர்க்கு அந்த பேருந்தில் இல்லை. நீங்க வேலை செய்யுரீங்களா சார்? நானோ அந்த நடத்துனரிடம் ஆம் என்று கூறினேன். அப்போது அவர் என்னிடம் பேசிக்கொண்டே வந்தார். அவர் தான் என்னைப்போன்று பார்வயற்றவர்களிடம் மிக்க மரியாதை வருவதர்க்கான காரணத்தை என்னிடம் கூறினார். அதில் பின்வரும் ஒரு நிகழ்ச்சியையும் கூறினார். 1984 ஆம் ஆண்டில் சென்னை பூவிருந்தமல்லியிலுள்ள அரசு பார்வயற்ற பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு எழுத்தராக சென்றிருந்தேன். அப்போது தான் என்னுடைய பள்ளிப்படிப்பை முடித்த காலமது. அவர்களுக்கு நான் வினா தாழில் உள்ள வினாக்களை வாசிக்கும்போது அவர்கள் அதர்க்குச்சரியாக விடைகளைக்கூருவார்கள். அது மட்டுமல்ல ஒருமுறை ஒருவருக்கு நான் தேர்வை எழுதிவிட்டு அவரோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் அலைகள் ோய்வதில்லை என்ற திறைப்படத்தின் கதயை அப்படியே ஒரு சிரிய காட்சிக்கூட தவராமல் கூறினார் என்று அவர் தனது வாழ்வில் பார்வையற்றவர்கள் மீது அதிக மதிப்பு வருவதர்க்கு இவையெல்லாம் ஒரு காரணம் என்று கூறினார். அதன் பிறகு நாங்களும் பேசிக்கொண்்டே சென்றோம். நான் இறங்கும் இடமும் வந்தது. இந்த மாதிரி எந்த ஒரு நடத்துனரும் என்னோடு பேசியதில்லை. அது மட்டுமல்ல, ஒருவர் தானாகவே என்னைப்போன்றவர்களிடம் பேசுகின்றார் என்றால் அதை நாங்கள் ஒரு பெரிய ஆச்சரியமாக தான் பார்ப்போம். காரணம், இன்றைய காலகட்டத்தில் எங்களுக்கு ஒருவர் ஏதாவது ஒரு உதவி செய்யவேண்டுமென்றால் அதற்க்கு அவர் பலமுறை சிந்தித்து அதன் பிறகு தான் முன் வருவார். இது சென்னையில் ஓரளவிர்க்கு அனைவரும் பார்வையற்றவர்களுக்கு சாலையை கடக்க உதவி செய்வது அல்லது எங்காவது செல்லவேண்டுமென்றால் எளிதில் உதபுவார்கள். ஆனால், பல மாவட்டங்களில் இத்தகைய விழிப்புணர்வு பொது மக்களிடம் இல்லை. ஏன், என்னுடைய வாழ்க்கையிலேயே ஒரு சம்பவம் நடந்தது. ஒருமுறை நான் என்னுடைய ஊருக்கு சென்னையிலிருந்து சென்றுகொண்டிருந்தேன். நாகர்க்கோவிலிலிருந்து மார்த்தாண்டம் செல்வதர்க்கு பேருந்து ஏறவேண்டிய நேரம் அது ஆனால், நான் இங்கிருந்து எதிர்முனைக்கு சாலையை கடக்கவேண்டும். அதர்க்காக பலரிடம் நான் உதவி கேட்டுக்கொண்டிருந்தேன். எவரும் சாலையை கடக்க உதபவில்லை. அனைவரும் சொன்ன ஒரு பதில் என்ன தெரியுமா? சார் எனக்கு அலுவலகத்திர்க்கு நேரமாச்சு. மற்றொருவர் என்னிடம் பேருந்து நிக்குது எனக்கு இடம்பிடிக்க வேண்டும். என பல சாக்குகளை சொன்னார்கள். ஒரு நிமிடத்தில் கடக்க வேண்டிய சாலைக்கு நான் பிறரிடம் உதவி கேட்டு நின்ற நேரம் எவ்வளவு தெரியுமா? சுமார் அறை மணி நேரம். அந்த நேரத்தில் நான் என்னுடைய மனதில் சென்னையை நினைத்தேன். காரணம், இங்கெல்லாம் சாலயை கடக்க வேண்டுமென்றால் ைந்து நிமிடத்திர்க்கு மேல் நான் நின்றது கிடையாது. இதர்க்கு நாம் எவரையும் குறை கூற முடியாது. மக்களிடத்தில் எங்களைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாதது தான் காரணம். இவற்றையெல்லாம் களைய வேண்டுமென்றால், என்னைப்போன்றவர்களோடு நீங்கள் பேசி எங்களைப்பற்றிய சந்தேகங்களை பேசி தெரிந்து கொள்ளலாம். என்பது என்னுடைய கருத்து.

No comments:

Post a Comment