Saturday, November 23, 2013

கடிதம் பற்றிய நினைவலைகள்

தொலைப்பேசி வருவதர்க்கு முன்னால் கடிதங்கள் முக்கிய பங்காற்றின என்பது நமக்கு தெரியும். நேற்று ஒரு வானொலியில் கல்வி பற்றிய ஒலிபரப்பு நடைபெற்றிருந்தது. அதில் கடிதம் எப்படி எழுதுவது என்பதை பற்றிய ஒரு செய்தியயும் அவர்கள் ஒலிபரப்பினார்கள். அப்போது என்னுடைய மனதில் 1994 ஆம் ஆண்டில் நான் சென்னைக்கு வந்தபோது வீட்டிர்க்கு எழுதிய கடிதங்களும் எனக்கு வந்த கடிதங்களும் தான் நினைவிர்க்கு வந்தன. அப்போது தொலைப்பேசிகள் எங்காவது ஒரு வீட்டில் தான் இருக்கும். என்னுடைய வீட்டில் தொலைப்பேசி கிடையாது. கடிதம் மூலம் தான் தகவல்களை பரிமாறிக்கொள்வோம். அப்போது நான் 3 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நேரம், எனக்கு வந்த கடிதங்கள் அனைத்தயும் நான் சேமித்து வைத்தேன். ஏறக்குறைய 12 கடிதங்கள் மொத்தமாக நான் சேமித்தவை. காலாண்டு விடுமுறயின்போது தான் அவற்றை மொத்தமாக தூக்கி வெளியே வீசினேன். அப்போதெல்லாம் கடிதம் எழுதும்போது ஒரு பாடலை சிலர் பாடிக்கொண்டே எழுதுவது வழக்கம். அது எந்த பாடலென்றால், அப்போது வெழிவந்த காதல்கோட்டை என்ற திறைப்படத்தில் உள்ள நலம் நலமறிய ஆவல் என்ற பாடல் தான். ஒரு விடுமுறைக்கு நாங்கள் வீட்டிர்க்கு செல்லவேண்டுமென்றால், கடிதத்தில் தான் நாங்கள் எங்களுடைய வீட்டிர்க்கு தெரிவிப்போம். சிலருடைய கடிதங்கள் சேராமல் கூட இருந்தன. ஆனால் இன்று அனைவருடைய கைகளிலும் செல் தொலைப்பேசிகள் அதிகமாக இருக்கின்றன; எனவே நாம் ஒரு செய்தியை எளிதில் மற்றவர்களோடு நாம் பஹிர்ந்துகொள்ளமுடியும். எது எப்படி இருந்தாலும் கடிதம் எழுதும் பாரம்பரியத்தை இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ளவேண்டும் என்பது எனது கருத்து.

No comments:

Post a Comment