Sunday, November 3, 2013

திகிலின் மரு பக்கம்

பயம், இதன் மரு உருவம் தான் திகில். காரணம், சில அதீதமான பயம் உச்சிக்கே சென்றுவிட்டால் அது பல பீதிகளையும் சில அனுபவங்களையும் நமக்கு கொடுக்கும். சிலர் நம்மிடத்தில் அவர்கள் வாழ்வில் நடந்த சில நிகழ்ச்சிகளை கூறும்போது நமக்கே சில நிமிடங்களில் நம்மை அறியாத ஒரு பயம் ஏற்ப்படும். இது தான் மனித இயல்வு. ஆனால், சிலர் திரில் கதைகளையும் நம்மிடத்தில் கூறுவார்கள். அந்த கதைகள் அனைத்தும் போலியாக இருந்தாலும் நாம் அவற்றை கேட்கும்பொழுது நேரில் நடப்பது போன்று நினைத்து நாம் சில நிமிடங்கள் பயந்து விடுவோம். இதற்க்கு ஒரு சான்று, நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது பாலசுப்பிரமணி என்ற ஒரு அண்ணா ைந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தார். அவர் வாரந்தோரும் சனிக்கிழமைகளில் பேய் கதைகளை கூறுவார். அதை கேட்டு நாங்கள் பயந்துவிட்டு ஒருவரை ஒருவர் மாற்றி கிண்டல் செய்தும், நக்கலடித்தும் எங்களுடைய பயத்தை போக்கிக்கொள்வோம். ஆனால் எவருமே பயத்தை எளிதில் வெளிப்படுத்திக்கொள்ளமாட்டோம். இவர் கூரும் கதைகளில் வரும் சில சம்பவங்கள் நேரில் நடப்பது போன்றே இறுக்கும். ஆனால் இவருடைய கதை படைப்பாற்றல் தான் இந்த திகிலூட்டும் கதைகளின் மருபக்கம். அவருடைய கதைகளனைத்தும் சில நேரங்களில் நான் நினைத்து பார்த்ததுண்டு. நாம் பள்ளியில் பயின்ற சில கதைகளில் வரும் நிகழ்வுகள் ஏதோ ஒரு உச்சகட்டமான பயத்தை ஏற்ப்படுத்தும். ஆனால், அக்கதைகளில் வரும் முடிவானது ஏதோ ஒரு சாதாரணமான கதை கேட்டது போன்ற ஒரு முடிவை தான் கொடுக்கும். உதாரணமாக நாம் அனைவரும் அறிந்த ஒரு கதை, இரண்டு நண்பர்கள் காட்டிற்க்கு செல்கின்றார்கள். திடீரென்று கரடி வந்து விடுகின்றது. இதை பார்த்த நண்பர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து போனார்கள். அப்போது ஒருவன் மரத்தின் மீது ஏரிக்கொண்டான். ஆனால், மற்றொருவனுக்கோ மரமேரத்தெரியாது. அவன் இறந்தவன் போன்று நடித்தான். கரடியோ அவனை நுகர்ந்து பார்த்து அவன் இறந்து விட்டான் என்று நினைத்து வந்த வழியே திரும்ப சென்று விட்டது என்பது தான் கதை. இக்கதையில் கரடி வருவது ஒரு திகிலாக இருந்தாலும் அந்த நேரத்தில் அவர்கள் இருவரும் தனது சமயோஜித அரிவை பயன்படுத்தி அவர்கள் இருவரும் தப்பிப்பது தான் ஒரு முடிவாகும். ஆனால் ஒரு நிமிடம் நாம் சிந்தித்து பார்க்கவேண்டும். கரடிக்கு மரமேரத்தெரியும். அவன் மரத்தின் மீது ஏரினாலும் கரடி மரத்தின் மீதேரி அவனைக்கொல்லும். இது தான் உண்மயில் நிகழும். ஆனால் கதையில் சொல்லப்பட்ட முடிவானது பொயியாக இருந்தாலும் எழுத்தாளருடைய படைப்பாற்றல் தான் இந்த திகிலான கதையின் மருபக்கம். இதேப்போன்று பேய்கள் பற்றிய கதைகளை நாம் அதிக அழவில் கேழ்வி பட்டிருப்போம். ஆனால், உண்மயிலேயே பேய்கள் உள்ளதா என்பது நமக்கு தெரியாது. ஆனால் சிலப்பேர் தாங்கள் பேய்களை நேரில் பார்த்ததாக கூறுவார்கள். அதற்க்கு சில நிகழ்ச்சிகளை கூறி மற்றவர்களையும் நம்ப வைத்து விடுவார்கள். அது உண்மையா, அல்லது பொயியா என்பது எவருக்கும் தெரியாது. ஆனால் இத்தகையவர்களுடைய கதைகளை நம்புவதும், நம்பாமல் இருப்பதும் நமது விருப்பம். மனிதன் உண்மையிலேயே ஒரு கவிஞன். அவன் வடிக்கும் கதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேரு விதமாக உள்ளன என்பது தான் உண்மை. எனவே நாம் நம்முடைய படைப்புகளை சிந்தித்து பயன்படுத்தினால் அது அனைவருக்கும் மகிழ்ச்சியை தரும் என்பது என்னுடைய கருத்து.

No comments:

Post a Comment