Monday, October 28, 2013

மனதில் தோன்றிய நினைவலைகள்

மனிதனுக்கு கடவுள் கொடுத்த அருமையான ஒரு அதிசயம் என்ன தெரியுமா? முன்பு அவன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அவன் மீண்டும் தன்னுடைய மனதில் அசைபோட்டு பார்க்கும் ஒரு கொடை தான். அந்த நினைவுகளில் சில பேர் நம் வாழ்வில் வந்து மரக்க முடியாத ஒரு தனி முத்திரைகளை பதித்தவர்களென்று சொன்னால் அது நமக்கு மீண்டும் மீண்டும் அவர்களை நினைக்கத்தூண்டிக்கொண்டே இருக்கும். ஆனால் பல வரிடங்களுக்கு பிறகு நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ அவர்களிடம் பேசினோம் என்றால் அதில் கிடைக்கின்ற மகிழ்ச்சி ஒரு தனி சந்தோஷம் தான். அந்த மகிழ்ச்சியை வெளியே சொல்லமுடியாது, சில நேரங்களில் அவர்களுடைய குறல் கேட்டால் நமக்கு ஒரு நிமிடம் என்ன பேசுவதென்பது நமக்கே தெரியாது. இவை எல்லாம் நம்முடைய மகிழ்ச்சியின் உண்மையான ஒரு வெளிப்பாடு தான். ஆனால் அதிலும் நாம் அவர்களை சிலவேளைகளில் அடயாளம் கண்டுகொள்ள முடியாது. ஆனால், அவர்கள் நம்மை அடயாளம் கண்டு நம்மோடு வந்து பேசினால் அப்போது இருக்கின்ற மகிழ்ச்சி எப்படி பட்டது தெரியுமா? இந்த உலகில் உள்ள பொருட்களை விட விலைமதிப்பற்றதாகும். இதனை ஒரு விதமான அன்பு என்றும் கூறலாம். சென்ற வாரம் ஒரு நாள் கொட்டும் மழை அலுவலகத்திர்க்கு போக முடியவில்லை. வீட்டிலே இருந்து வேலை செய்யுங்க சார் என்று ஒலித்த தொலைப்பேசி, ஆம் என்று சொல்லாமல் சொன்ன என்னுடைய மனசு. இந்த நேரத்தில் தான் என்னுடைய தொலைப்பேசியில் வந்த ஒரு அழைப்பு என்னை மிகவும் மகிழ்ச்சியின் உச்சிக்கே அழைத்து சென்றது. பிஜோன் உனக்கு மேபுல் டீச்சர் நம்பர் வேணுமாடா? என்று கேட்ட எனது னண்பனுடைய குறல் தான் அது. பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை என்னை ஊக்கமளித்து எனக்கு பலவிதங்களில் உதவிய ஆசிரியை தான் அந்த மேபுல் டீச்சர். நீண்ட நாளாக தேடிய அந்த டீச்சருடைய நம்பர் கெடச்சதும் என் மனதில் ஒரு இணம் புறியாத ஒரு மகிழ்ச்சி. அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து அந்த ஆசிரியரிடம் நான் பேசினேன். அப்போது அந்த ஆசிரியை கொஞ்சம் கொஞ்சமாக என்னை நினைவு கூர்ந்தார். ஆனால் எனக்கோ மனதில் அந்த ஆசிரியை எனக்கு செய்த பல உதவிகள், அந்த ஆசிரியரிடம் சேட்டை செய்து மாட்டிய நாட்கள், கணக்கென்றாலே எனக்கு அலர்ஜி அந்த கணிதப்பாடத்தை என் மனதில் புறியவைக்க அந்த ஆசிரியை எடுத்த முயர்ச்சிகள், கலை நிகழ்ச்சிகளில் டீச்சர் இருக்குரேண்ட நீ கலந்துக்கொள் என்று அந்த ஆசிரியை எனக்கழித்த ஆர்வம், இந்த ஆசிரியரின் முயர்ச்சியால் குழந்தை செல்வங்கள் என்ற கவிதயை மேடயிலே பேசி பரிசு பெற்ற நாட்கள். இவை அனைத்தும் அந்த ஆசிரியரிடம் நான் பேசிக்கொண்டிருக்கும்போது என் மனதை பள்ளி வாழ்க்கைக்கு மீண்டும் அழைத்து சென்றது. அது மட்டுமா, இன்றும் அந்த ஆசிரியை என்னிடம் தொலைப்பேசியிலே அன்று பேசிய அதே கனிவான வார்த்தைகளால் பேசியது தான் என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தின. எனவே இப்படி பட்ட ஒரு ஆசிரியை எனக்கு கிடைத்தது மாபெரும் பாக்கியமாக நான் கருதுகின்றேன். நான் வேலை செய்கின்றேன் என்று சொன்னதும் அந்த ஆசிரியை மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார். எனவே வாழ்வில் என்றும் மரக்க முடியாத நவர்களை நாம் சந்தித்து அவர்களோடு நல்லுரவு வைத்துகொள்ளவேண்டும் என்பது என்னுடைய கருத்து. வாழ்வில் நாம் முந்நேற பாடுபட்ட நவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை நாம் நம்முடைய மனதில் என்றும் நினைவு கூறவேண்டும். நினைக்கத்தெரிந்த மனமே உனக்கு மரக்கத்தெரியாதா என்று பாடிய அன்த கவிஞன் ஒரு உண்மையைச்சொன்ன கவிஞராவார். நினைக்கத்தெரிந்த மனமானது வாழ்விலே நடந்த மகிழ்ச்சியான தருணங்களை நினைக்க வேண்டும். வாழ்விலே நடந்த தீய நிகழ்வுகளை மரந்து நட்புரவோடு வாழும் மனமே நல்ல மனதாகும்.

No comments:

Post a Comment