Tuesday, October 22, 2013

பார்வயற்றவர்களுக்கு உதவும் நாய்கள் பற்றி ஒரு சிறப்பு பார்வை

வீட்டிலே நாம் செல்ல பிராணிகளாக சில விலங்குகளை வளர்ப்பது உண்டு. அவற்றில் ஒன்று நாய். ஆனால் இந்த நாய்கள் மனிதர்களுக்கு அதுவும் பார்வயற்றவர்களுக்கு அவர்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச்செல்வதற்கும், அவர்களை பத்திரமாக சாலைகளை கடப்பதற்கும் மேலை நாடுகளில் பெருமளவில் பயன்படுத்த படுகின்றன. இந்த வகை நாய்கள் எவ்வாரு நம்மை போன்ற பார்வயற்றவர்களுக்கு உதவுகின்றன என்பதை இஸ்ரேல் நாட்டில் இத்தகய நாய்களை பயன்படுத்தும் ஒரீலியா என்ற ஒரு பார்வயற்ற பெண்மணியிடம் ஸ்கைப் மூலமாக நான் நடத்திய ஒரு சிறு உறையாடலை உங்களோடு பஹிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். முதலில் அவர் கூறியதாவது: கைட் டாக்ஸ் என்று அழைக்கப்படும் இந்த நாய்களை வாங்குவது என்பது அவ்வழவு சுலவமல்ல. இஸ்ரேல் நாட்டில் ஒரு நாயை வாங்குவதற்கு சுமார் இருவதாய்ரம் டாலர்களாகும். அதன் பிறகு அதற்கு பயிர்ச்சி அழிப்பது ஆகும் செலவுகள் பராமரித்தல் போன்ற செலவுகள் என்பது மிகவும் அதிகம். ஆனால், இஸ்ரேல் நாட்டில் இதற்கான சலவீனங்களை அரசே ஏற்று கொள்கின்றது. எனவே எங்களால் இத்தகைய நாய்களை எளிதில் வாங்க முடிகின்றது. என்று கூறினார். இதைப்பற்றி மேலும் விவரமாக கூறுங்களே? அதற்கு அவர்: இந்த நாய்களை பயன்படுத்துவதென்பது சற்றே கடினமானது. இதற்கு நடைபாதைகள் சீராகவும், தங்கு தடை இல்லாமலும் இருக்க வேண்டும். மேடு பள்ளமான பகுதிகளில் இத்தகைய நாய்களோடு நாம் நடந்து செல்வது கடினமாக இருக்கும். குறிப்பாக, மொரீஷியஸ், இந்தியா, பாக்கீஸ்த்தான் போன்ற நாடுகளில் இவற்றை பயன்படுத்துவதென்பது மிகவும் கடினம். காரணம் நடைபாதைகளும் சரியாக இல்லாத பாதைகளும் தான். இவற்றிர்க்கென்றே தனி பயிர்ச்சி மய்யங்கள் எங்கள் நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. சாலைகளை கடக்க எவ்வாரு இந்த நாய்கள் உதவுகின்றன? இத்தகைய நாய்கள் தானாக சாலைகளை கடப்பதில்லை. மாராக நாம் கொடுக்கும் கட்டளைகளை வைத்து தான் அவைகள் சாலைகளை கடக்கின்றன. எங்கள் நாட்டில் ஒலி, ஒளி மற்றும் அதிர்வுகள் மூலமாக சாலைகளை கடக்க எங்களுக்கு வசதிகள் செய்ய பட்டுள்ளன. எனவே அவைகளுக்கு கட்டளைகளை நாங்கள் கொடுத்தால் தான் அவைகள் சாலைகளை கடக்கும். நாய்களுக்கு நிறக்குருடு பிரெச்சனை உள்ளது என்கின்றார்களே அதை பற்றி கொஞ்சம் விளக்கமாக கூருங்களே? ஆம், அது உண்மை தான். நாய்களுக்கு எதை பார்த்தாலும் பச்சை நிரமாக தான் தெரியும். மாராக, அவைகள் மனிதர்களுடைய ரத்த வாசனை உடலமைப்பு போன்றவற்றை வைத்து தான் மனிதர்களை அடயாளம் கண்டு கொள்கின்றன. இத்தகைய கைட் டாக்ஸ் முறை சில நாடுகளில் தோல்வி அடைய நாய்களின் நிற குருடு பிரெச்சனையும் ஒன்று. மேலும் இவற்றிர்க்காகும் செலவு மிகவும் அதிகம் என்பதாலும் இந்த முறை தோல்வியில் முடிந்தது. இருதியாக அவர் ஒரு நிகழ்ச்சியை என்னுடன் பஹிர்ந்து கொண்டார். ஒரு நாள் நான் என்னுடைய சொந்த வேலைக்காக நான் வெளியே சென்றிருந்தேன். அது ஒரு அடுக்கு மாடி கட்டிடம். நான் மாடிப்படி ஏருவதற்காக சென்றேன். ஆனால் நாயோ ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் நின்றுவிட்டது. நான் அதை இழுத்து பார்த்தேன், ஆனால் நாய் நகர்வதாக இல்லை. சில நிமிடங்கள் கழித்து ஒருவர் வந்து சொன்னப்பிறகு தான் எனக்கு அங்கே ஒரு பெரிய பள்ளம் இருப்பது தெரிய வந்தது. எனவே இத்தகைய நாய்களை நாம் வளர்ப்பதில் மிகவும் அதிக அழவில் அக்கறை காட்ட வேண்டும்.

No comments:

Post a Comment